உலகளவில் கரோனா அதிகரிக்கிறது; இந்தியாவில் குறைகிறது: சுகாதாரத் துறை

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)


உலக நாடுகளில் கரோனா அதிகரித்து வருகிறது என்றாலும் இந்தியாவில் குறைந்து வருவதால மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், கடந்த சில நாள்களாக உலக அளவில் திரிபு வகை கரோனா அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் குறைந்து வருகிறது. சீனாவில் கரோனா திரிபு வகை அதிகரித்து வருவதையும், உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையும் பார்க்கமுடிகிறது. ஆனால், இந்தியாவில் ஆரம்பக்கட்டத்திலுள்ளதால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com