மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்

நாட்டின் பொருளாதாரத்தில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தாலும்கூட, மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படாது எனறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்

புது தில்லி: நாட்டின் பொருளாதாரத்தில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தாலும்கூட, மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படாது எனறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த திடீா் அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் இன்னலை எதிா்கொண்டனா். புதிதாக வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் அச்சிடும் பணிகளை ஆர்பியை ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பணப்புழக்கத்திலிருந்தும் 2,000 ரூபாய் நோட்டுகள் மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை அமைச்சகம் அளித்த பதிலில், மத்திய அரசு, பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தைக் குறைத்து எண்ம பணப்பரிவர்த்தனைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

பணப்புழக்கம், சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, ரிசர்வ் வங்கியின் தேவை என பல்வேறு காரணங்களுக்காக, தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசனை நடத்தி பணப்புழக்கம் மற்றும் பணத் தேவையை அடிப்படையாக வைத்து புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும். ஆனால், பணப்புழக்கத்தைக் குறைப்பதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக கருப்புப் பணத்தை ஒழிப்பது உள்ளிட்ட மூன்று முக்கிய காரணங்களை அறிவித்திருந்தோம் என்று பதிலளித்திருந்தார்.

இதற்கு, ஒருவேளை, நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் அதிகரித்தால், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மீண்டும் எடுக்குமா என்று கேள்வி எழுப்பியதற்கு, பணமதிப்புழப்பு நடவடிக்கையை மீண்டும் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com