பாராசிடமால் உள்பட 127 மருந்துகளின் விலை குறைகிறது; நீரிழிவு மாத்திரை விலை உயர்வு

தேசிய மருந்துகள் விலைக் கொள்கையால் இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாராசிடமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பாராசிடமால் உள்பட 127 மருந்துகளின் விலை குறைகிறது; நீரிழிவு மாத்திரை விலை உயர்வு
பாராசிடமால் உள்பட 127 மருந்துகளின் விலை குறைகிறது; நீரிழிவு மாத்திரை விலை உயர்வு


புது தில்லி: தேசிய மருந்துகள் விலைக் கொள்கையால் இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாராசிடமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் பாராசிடமால் மருந்தின் விலை தற்போது இண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மெட்ஃபார்மின் உள்ளிட்ட சில மருந்துகளின் விலைகள் மட்டும் உயர்ந்துள்ளன.

விலை குறைக்கப்பட்ட 127 மருந்துகளில் பாராசிடமால், அமோக்ஸிலின் உள்பட பல மருந்துகள், நோயாளிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் மருந்துகளாக இருப்பதால், மக்களுக்கு பெரிய அளவில் இந்த விலைக்குறைப்பு பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.

பாராசிடமால் (650 எம்ஜி) மாத்திரை தற்போது ஒரு மாத்திரை ரூ.2.3 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் போது ஒரு மாத்திரை விலை ரூ.1.8 காசுகளாக இருக்கும். 

இதுபோல, தொற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் விலையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  அதேவேளையில், இரண்டாம் வகை நீரிழிவுக்கு கொடுக்கப்படும் மெட்ஃபார்மின் (500 எம்ஜி) மாத்திரை விலை ஒன்று ரூ.1.7 காசுகளாக இருந்த நிலையில், ரூ.1.8 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ஃபார்மின் கூட்டு கலவையான மாத்திரைகளின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் பல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பாராசிடமால் உள்ளிட்ட மாத்திரைகளின் விலை குறைந்திருப்பது ஒரு பக்கம் வரவேற்கப்பட்டாலும், ஏராளமான முதியவர்கள் பயன்படுத்தும் நீரிழிவுக்கான மாத்திரை உள்ளிட்ட சில மாத்திரைகளின் விலைகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com