16 மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் நடந்து விமான நிலைய ஊழியர் சாதனை

அசாமின் குவாஹாட்டியில் 16 மணி நேரம் 35 நிமிடத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து இந்திய விமான நிலைய ஊழியர் ஒருவர் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
16 மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் நடந்து  விமான நிலைய ஊழியர் சாதனை

அசாமின் குவஹாட்டியில் 16 மணி நேரம் 35 நிமிடத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து இந்திய விமான நிலைய ஊழியர் ஒருவர் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

55 வயதான ரதுல் குமார் ஜகாரியா இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார். குவாஹாட்டியில் உள்ள லோக்பிரியா பர்தோலி சர்வதேச விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரப்பில் கூறியதாவது: ரதுல் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அசாரா காவல் நிலையத்தில் இருந்து காலை 4.03 மணிக்கு நடக்கத் தொடங்கினார். அவர் போகோ பகுதிக்கு சென்று மீண்டும் அதே நாளில் அசாரா காவல் நிலையத்துக்கு இரவு 8.38 மணிக்கு மீண்டும் வந்தடைந்தார். அவர் 16 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் ரதுல் குமார் ஜகாரியாவுக்கு நேற்று (டிசம்பர் 22) பாராட்டு விழா நடத்தியது. இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற குவஹாட்டி சர்வதேச விமான நிலையத்தின் முதன்மை அலுவலர் சினேகாசிஸ் தத்தா, ரதும் குமார் ஜகாரியாவுக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்வில் அசாரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com