சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
சிக்கிம் மாநிலம், சாட்டன் என்ற பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் 3 வாகனங்களில் தாங்கு பகுதியை நோக்கி இன்று காலை புறப்பட்டனர். செமா என்கிற பகுதியில் ஒரு வளைவில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது அதில் ஒரு வாகனம் மட்டும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க- மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்து: மத்திய அரசு ஒப்புதல்
உடனடியாக சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இருப்பினும் இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியானதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கிமில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியானதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


