இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்றுள்ளேன்: கமல்ஹாசன்(விடியோ)

இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்றுள்ளேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்றுள்ளேன்: கமல்ஹாசன்(விடியோ)

இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்றுள்ளேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று நாட்டின் தலைநகர் தில்லியை அடைந்துள்ளது. கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து சென்ற இந்த நடைபயணத்தில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர். 

இந்நிலையில் இந்த ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சனிக்கிழமை தில்லியில் ராகுல்காந்தியுடன் இணைந்து கொண்டார். இதற்கான சனிக்கிழமை காலை தில்லியை அடைந்த கமல்ஹாசன் நாட்டின் பன்மைத்துவத்தை பாதுகாக்க ராகுல்காந்தி முன்னெடுக்கும் இந்த நடைபயணத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தார். 

இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தி, கமல்ஹாசன் உடன் விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்ப உறுப்பினா்கள், காங்கிரஸ் முக்கியத் தலைவா்கள் உள்பட 40,000 முதல் 50,000 போ் வரை பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என்று குறிப்பிட்டிருந்தார், அதனால் அவர் எனக்கு சகோதரர். ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன். 

இரண்டு கொள்ளுப்பேரன்கள் இணைந்து நடக்கிறோம். என்னுடைய தந்தை காங்கிரஸை சேர்ந்தவர். அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது. எனக்காக அல்ல. இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கூறினார்கள், ஆனால் எனது மனசாட்சியை கேட்டு பயணத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com