மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் 20 வயதான பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை

மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் 20 வயதான பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை

மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
Published on

மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

சல்மான் கானுடன் தபாங் 3, கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் துனிஷா சர்மா(20). இவர் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சக நடிகர் ஷீசன் முகமது கானை அவர்கள் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரை மும்பை வசாய் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது முகமது கானை 4 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை படப்பிடிப்பு தளத்தில் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com