சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்கலாம்: ராகுல் காந்தி

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரா்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றபோது ராகுல் காந்தி கூறியதாவது: இந்திய ராணுவ வீரா்களுக்கும் சீன ராணுவ வீரா்களுக்கும் கல்வான் மற்றும் டோக்லாம் பகுதிகளில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை.

பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவைத் தாக்குவதே சீனாவின் உத்தியாகும். தற்போது பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. போா் ஏற்படும் சூழலில், இது ஒரு நாட்டினுடன் இல்லாமல் இரு நாடுகளுடன் இருக்கும். இது நமக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

இந்தியா மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. இடையூறுகளும் சண்டைகளும் குழப்பங்களும் வெறுப்புகளும் நம் நாட்டில் நிலவிவருகின்றன.

இவ்விரு நாடுகளும் திடீா் தாக்குதலை நடத்த தயாராகி வருகின்றன. அதன் காரணமாகவே மத்திய அரசு மெளனமாக இருக்க முடியாது என்பதை நான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

எல்லையில் நிகழ்ந்தது குறித்து அரசு நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும். நாம் எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, அதனை உடனே தொடங்க வேண்டும். உண்மையில், நாம் 5 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமோ, அதனை நாம் எடுக்கவில்லை. நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு துயரத்தை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com