
அகமதாபாத்தில் உள்ள கண் சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியர் இருவர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில்,
இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. மருத்துவமனையில் புகை மட்டும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் இருந்து இரண்டு சடலங்களை போலீஸார் மீட்டனர். அதிகாலை 3.30 மணியளவில் தீ பரவியதாகவும், அது தானாகவே அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
படிக்க: திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா தொடக்கம்!
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் நரேஷ் பார்கி மற்றும் அவரது மனைவி ஹன்சா என அடையாளம் காணப்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றி வந்த தம்பதியினர் மருத்துவமனை வளாகத்தில் வசித்து வந்தனர்.
புகையைச் சுவாசித்ததால் தம்பதியர் இறந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.