தனியார் வங்கி பரிவர்த்தனை மோசடிகள் தொடர்ந்து அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

2022 - 23 நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் ரூ.305 கோடி மதிப்பில் வங்கிப் பரிவர்த்தனை மோசடிகள் நடந்துள்ளதாகவும், மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவி
தனியார் வங்கி பரிவர்த்தனை மோசடிகள் தொடர்ந்து அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்


2022 - 23 நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் ரூ.305 கோடி மதிப்பில் வங்கிப் பரிவர்த்தனை மோசடிகள் நடந்துள்ளதாகவும், மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த நிதியாண்டில், வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அவற்றில் சம்மந்தப்பட்ட மொத்தத் தொகையும் பாதியாக குறைந்துள்ளது மற்றும் 2022-23 முதல் ஆறு மாதங்களில், இது மேலும் குறைந்துள்ளது. இருப்பினும், மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 

2021-22ல் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) போக்கு மற்றும் முன்னேற்ற அறிக்கையின் தரவுகளின்படி, மோசடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பயன்பாட்டில் உள்ள பண அட்டைகள் மற்றும் இணைய வழி பண பரிவர்த்தனை மோசடிகள் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

2021-22 இல் பொதுத்துறை  வங்கிகளை விட தனியார் வங்கிகளால் பதிவுசெய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. 

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட தொகையின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளில் 2021-22 இல் 66.7 சதவீதமாக இருந்தது, இது முந்தைய 2020 -21 நிதியாண்டின்  59.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாகவும், நடப்பு நிதியாண்டிலும் இது மேலும் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும், நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் ரூ.19,485 கோடி மதிப்பில் நடைபெற்ற மோசடியில் 5,406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2020 - 21 ஆம் நிதியாண்டில் ரூ.15,998 கோடி மதிப்பில் நடைபெற்ற மோசடியில் 5,191 வழக்குகளும், 2021 - 22 ஆம் நிதியாண்டில் ரூ.6,477 கோடி மோசடியில் 6,379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2022 - 23 நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் ரூ.305 கோடி மதிப்பில் வங்கிப் பரிவர்த்தனை மோசடிகள் நடந்துள்ளது. 1915 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

கடன் வாங்கியதில் நடைபெற்ற மோசடிகளைவிட, பண பரிவர்த்தனை அட்டைகள் மற்றும் இணைய வழி பண பரிவர்த்தனை மோசடிகளே அதிகம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது கவனித்தில்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com