'கரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை' - அரசாணை வெளியீடு

'கரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை' - அரசாணை வெளியீடு

கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 
Published on

கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் உலகம் முழுவதுமே பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. தமிழகத்திலும் கடந்த 2 ஆண்டுகளில் கரோனா நோயாளிகள் அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஒப்பந்த முறையில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களின் பணிக்கால ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com