
நரேந்திர மோடி
நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.
2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படிக்க | மலேசியா, டோங்கோவில் பலியானோருக்கு மாநிலங்களவையில் இரங்கல்
இந்நிலையில், பட்ஜெட்டில் உள்ள சாத்தியங்கள், வாய்ப்புகள், நலன்கள் குறித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அதில் பேசிய அவர், பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறி வருகிறது. இதனால் நாட்டையும், அதன் பொருளாதார நிலையையும் முன்னோக்கி எடுத்துச்செல்வது அவசியம்.
7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ. 2.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சுயசார்பு இந்தியா மற்றும் நவீன இந்தியாவை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...