துப்பாக்கிச்சூடு சம்பவம்: இசட் பிரிவு பாதுகாப்பை மறுத்த ஓவைசி

மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய ஓவைசி
நாடாளுமன்றத்தில் பேசிய ஓவைசி

மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான ஓவைசியின் கார் மீது நேற்று துப்பாக்குச்சூடு நடத்தப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூா் - காஜியாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஜார்சி சுங்கச் சாவடி அருகே ஓவைசி பயணம் செய்தபோது, அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் அவரது காரை 4 முறை துப்பாக்கியால் சுட்டனா். 

இதனைத் தொடர்ந்து அவரின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்த பின்னர், அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் இசட் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக மக்களவையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி, “நான் மரணத்தை நினைத்து பயப்படவில்லை. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை. நான் அதனை மறுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒருபோதும் அமைதியாக இருக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் நீதியை வழங்குங்கள். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்பு மற்றும் அரசியல் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” எனத் ஓவைசி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com