கரோனாவால் பலியாகி கங்கையில் மிதந்த சடலங்களின் எண்ணிக்கை இல்லை: மத்திய அரசு

கரோனாவால் பலியாகி கங்கை கரையில் மிதந்த சடலங்களில் எண்ணிக்கை அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவால் பலியாகி கங்கை கரையில் மிதந்த சடலங்களில் எண்ணிக்கை அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையின்போது, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓடக்கூடிய கங்கை ஆற்றின் கரையோரங்களில் கரோனாவால் பலியானோரின் சடலங்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்தன. அந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இந்நிலையில், ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் கங்கை கரையில் புதைக்கப்பட்ட, ஆற்றில் மிதந்த சடலங்களின் எண்ணிக்கை குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.  டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஷ்வர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பதிலில், கரோனாவால் பலியாகி கங்கை கரையில் புதைக்கப்பட்ட சடலங்கள் குறித்த தகவல் அரசிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com