மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தேதிகள் மாற்றம்

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகளில் திருத்தம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

மணிப்பூர் மாநிலத்தில்  இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருந்த முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது பிப்ரவரி 28ஆம் தேதிக்கும், மார்ச் 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது மார்ச் 5ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கான முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com