திம்பம் மலைப்பாதை மூடப்பட்டது

தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதை மூடப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
திம்பம் மலைப்பாதை

தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதை மூடப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப் பாதையில் இரவுப் போக்குவரத்தை தடை செய்யும் வகையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது.

இந்த வழக்கில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திம்பம் மலைப்பகுதியில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக தாளவாடி, ஆசனூர் பகுதி மக்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து வருகின்றனர். மேலும் இதனை வலியுறுத்தி இன்று திம்பம் மலைப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி மாலை 6 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை வனவிலங்குகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக திம்பம் மலைப்பகுதி மூடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திம்பம் மலைப்பகுதியில் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இலகுரக சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அனைத்துவிதமான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com