உத்தரகண்ட், கோவாவில் நாளை (பிப்.14) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 
உத்தரகண்ட், கோவாவில் நாளை (பிப்.14) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு


கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் 55 தொகுதியில் 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக கடந்த 10ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

மணிப்பூர் மாநிலத்தில் 28ஆம் தேதி முதல்கட்ட தேர்தலும், மார்ச் 5ஆம் தேதி 2ஆம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கோவாவில் 40 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பாஜக, காங்கிரஸ், கோவா முன்னேற்றக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com