மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
மம்தா பானர்ஜி / மு.க.ஸ்டாலின்
மம்தா பானர்ஜி / மு.க.ஸ்டாலின்


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கிய நிலையில், முதல்வர் மம்தாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவருடன் முதல்வர் உரையாடினார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ஆம் தேதி முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது சட்டப்பேரவையை அவர் முடக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைப்பேசியில் அழைத்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதில் மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது, பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து மம்தாவிடம் பேசினேன். மாநிலங்களின் உரிமையைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என மம்தாவிற்கு உறுதியளித்தேன்.

மாநில சுயாட்சியை காக்க திமுக போராடும். எதிர்க்கட்சிகளின் மாநாடு தில்லியில் விரைவில் நடக்கவுள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com