பஞ்சாபில் காலை 11 மணி வரை 18% வாக்குப்பதிவு

காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் காண்கின்றன.
பஞ்சாபில் காலை 11 மணி வரை 18% வாக்குப்பதிவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 17.77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) காலை 8 மணி முதல் ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பஞ்சாபில் தேர்தலையொட்டி எல்லைகளில் பலத்த சோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான விவரங்கள் முழுப்பட்டியலாக ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் எளிதில் வாக்குச்சாவடி மையங்களை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நிலவரப்படி மக்கள் குறைந்த அளவே வந்து வாக்களித்து வருவதாகவும்,  நண்பகலில் அதிக அளவு கூட்டம் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமுனைப் போட்டி: காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் காண்கின்றன.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com