உ.பி. பேரவைத் தேர்தல்: காலை 11 மணி வரை 21% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உ.பி. பேரவைத் தேர்தல்: காலை 11 மணி வரை 21% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

16 மாவட்டங்களில் ஹாத்ரஸ், ஃபிரோஸாபாத், ஃபரூக்காபாத், கான்பூர், ஹமீர்பூர், மைன்புரி, ஜான்சி, லலித்பூா், காஸ்கஞ்ச் உள்ளிட்ட 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 627 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.15 கோடிக்கும் அதிகமானவா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

காலை முதல் மந்தமான நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது வாக்குச்சாவடிகளுக்கு அதிக அளவிலான மக்கள் வருகை புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com