
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கைக் கால் அணிய உதவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மும்பையில் உள்ள அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்துக்கு இன்று காலை சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கைக் கால் அணிய அவர் உதவி செய்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "இன்று, எனது மும்பை பயணத்தின் போது, அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ஒரு சிறப்புத் திறனாளி ஒருவருக்கு செயற்கைக் கருவி அணிய உதவியுள்ளேன்.
இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது". என்று மாண்டவியா கூறினார். அத்துடன் ட்வீட் செய்து ஒரு படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மன்சுக் மாண்டவியா, இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு நேற்று சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.