உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேறுங்கள்: இந்தியத் தூதரகம்

உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கிடைக்கும் விமானங்கள் மற்றும் தனி விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறும், இந்திய மாணவர்கள் அனைவரும் தனி விமானம் குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருடன் தொடர்பில் இருக்கவும் தூதரக அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு தூதரக பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைதளத்தைப் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2020 அதிகாரப்பூர்வ தரவுகளின்படி உக்ரைனில் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். உக்ரைன் விஷயத்தில் ரஷியா, நேட்டோ நாடுகள் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தூதரகத்திடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷியா 1,00,000 படைகளைக் குவித்துள்ளது. இதுதவிர போர்க் கப்பல்களையும் தயார்படுத்தி வருகிறது. மறுமுனையில், அமெரிக்காவும் ஏற்கெனவே கூடுதல் படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com