தாக்கரேவை சந்தித்த கேசிஆர்...பாஜகவுக்கு எதிராக அணி அமைக்க திட்டம்

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத அணியை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
தாக்கரேவை சந்தித்த கேசிஆர்
தாக்கரேவை சந்தித்த கேசிஆர்

பிரதமர் மோடியை தொடர்ந்து விமரிசித்துவரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர், இன்று மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளார். அங்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத அணியை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, பிராந்திய தலைவர்களை அவர் சந்தித்துவருகிறார்.

பின்னர், தாக்கரேவின் வீட்டில் உள்ள தோட்டத்தில் உத்தவ் தாக்கரே, அவரின் இளைய மகன் தேஜஸ், சந்திரசேகர் ஆகியோர் அமர்ந்திருப்பது போன்ற விடியோ வெளியானது. அப்போது, சிவசேனை கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தாக்கரேவின் அழைப்பின் பேரில் சந்திரசேகர் மதிய உணவு அருந்தவந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பவாரை சந்திக்கவுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மும்பையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சந்திரசேகரை வரவேற்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், சந்திரசேகர், உத்தவ் தாக்கரே, பவார், பால் தாக்கரே ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

முன்னதாக, மகாராஷ்டிர பயணம் குறித்து தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த வாரம், சந்திரசேகரை மும்பைக்கு வரும்படி தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போரில் முழு ஆதரவை தெரிவித்திருந்தார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com