பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பிப். 23,24 தேதிகளில் ரஷியா பயணம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 23 ஆண்டுகளில் ரஷியா செல்லும் முதல் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷிய பிரதமர் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், 

பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் கானின் வருகையை பாகிஸ்தான் மற்றும் ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் கான் முக்கிய சந்திப்பை நடத்துவதாக  பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பயணத்தின் முக்கியத்துவமாக பாகிஸ்தானும் ரஷியாவும் முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான ரஷிய முதலீடு, பாகிஸ்தான் கேஸ் ஸ்ட்ரீம் திட்டம் தொடர்பாக கட்டணமில்லா நடவடிக்கைகள் மற்றும் வரி விலக்குகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷிய தூதுக்குழு சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com