உக்ரைன்: கேரளம் மக்களின் விமானச் செலவை அரசே ஏற்கும்: பினராயி விஜயன்

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படும் கேரளம் மக்களின் விமான பயணச் செலவை கேரளம் அரசே ஏற்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 
உக்ரைன்: கேரளம் மக்களின் விமானச் செலவை அரசே ஏற்கும்: பினராயி விஜயன்

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படும் கேரளம் மக்களின் விமான பயணச் செலவை கேரளம் அரசே ஏற்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திவரும் தாக்குதலின் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு ஐரோப்பிய அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும்.

உக்ரைன் மீதான தாக்குதல் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இந்திய மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கேரளத்தைச் சேர்ந்த 2,320 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தில்லி, மும்பை வழியாக திரும்பும் அனைத்து மாணவர்களுக்கான விமான பயணச் செலவுகளையும் கேரளம் அரசே ஏற்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேரளம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனில் சிக்கியுள்ள கேரளம் மாநிலத்தைச் சேரந்த மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் கேரளம் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

உக்ரைனில் இருந்து அழைத்துவரப்படும் அனைத்து மாணவர்களுக்கான விமான பயணச் செலவுகளையும், தில்லி அல்லது மும்பையில் இருந்து கேரளத்திற்கு வரும் விமானச் செலவுகளையும் மாநில அரசே ஏற்கும் என்று சனிக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, கேரளம் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தனித்தனி கடிதங்களை அனுப்பி, உக்ரைனியில் சிக்கியுள்ள 2,320 கேரளம் மாணவர்களின் பாதுகாப்பை அந்நாட்டில் உள்ள அதிகாரிகளிடம் உறுதி செய்யுமாறும், சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து அவர்கள் தாயகம் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தனர். 

தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து கேரளம் அரசும் உக்ரைனில் இருந்து மீட்கப்படும் அம்மாநிலத்தை சேர்ந்தவர்களின் பயணச் செலவை ஏற்கும் என அறிவித்துள்ளது. 

இதனிடையே ருமேனியா, போலந்தில் இருந்து மாணவர்களை மீட்டு வருவதற்காக சென்ற ஏர் இந்தியா தற்போது அங்கிருந்து மாணவர்களை மீட்டுக்கொண்டு புறப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் தரையிறங்க உள்ளது.

உக்ரைனில் முக்கியமாக மருத்துவம் படித்து வரும் 76,000 வெளிநாட்டு மாணவர்களில் 18,000 பேர் இந்திய மாணவர்கள் என ஒரு தரவு தெரிவிக்கிறது.

மாணவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர், மாநில அரசுகள் மற்றும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com