நாட்டில் இதுவரை 177.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 177.44  கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 177.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 177.44  கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் 2,03,29,297 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 24,05,049 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,77,44,08,129 (177.44 கோடி) தடுப்பூசிகள் டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

கடந்த 24 மணி நேரத்தில் 20,439 பேர் கரோனா நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை மொத்தம் 4,22,90,921 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தோர் விகிதம் 98.54 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்சு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,11,472 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.26 சதவிகிதமாக உள்ளது. 

நாடு முழுவதும் பரிசோதனை திறன் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் வாராந்திர தொற்று விகிதம் தற்போது 1.26 சதவிகிதமாகவும், தினசரி தொற்று  விகிதம் 1.00 சதவிகிதமாகவும் உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 76,67,57,518 (76.67 கோடி) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,22,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com