உக்ரைன்: தில்லி வந்தடைந்தது 4-வது விமானம்

உக்ரைன்: தில்லி வந்தடைந்தது 4-வது விமானம்

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட இந்தியா்களுடன் 4-வது ஏர்இந்தியா விமானம் இன்று தில்லி வந்தடைந்தது. 

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட இந்தியா்களுடன் 4-வது ஏர்இந்தியா விமானம் இன்று தில்லி வந்தடைந்தது. 
உக்ரைனில் இருந்து ருமேனியாவுக்கு வந்து அங்கிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்துள்ளனர். இந்திய மாணவர்களுடன் ஏற்கெனவே நேற்று ஒரு விமானம் மும்பைக்கும், இன்று 2 விமானங்கள் தில்லிக்கும் வந்து சேர்ந்தன. 
இதுவரை 3 விமானங்கள் மூலம் 709 பேர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். உக்ரைனில் இருந்து தில்லி வந்த 4ஆவது ஏர்இந்தியா விமானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாணவர்கள் வந்துள்ளனர். வைஷ்ணவ நந்தா(திருப்பூர்), ஸ்ரீலேகா(மதுரை), பிரேமா(தூத்துக்குடி) ஆகியோர் 4ஆவது விமானம் மூலம் தில்லி வந்தனர். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் கடந்த பிப். 24-ஆம் தேதி உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. அந்த வான்வெளி வழியாக பயணிகள் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அந்நாட்டில் பரிதவித்து வரும் இந்தியா்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. 
அதற்குத் தீா்வு காணும் விதத்தில் உக்ரைனில் உள்ள இந்தியா்களை அந்நாட்டுக்கு அருகில் இருக்கும் ருமேனியா, ஹங்கேரி நாடுகள் வழியாக மீட்க முடிவு செய்யப்பட்டது.இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபேரஷன் கங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com