
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 3 மணி வரை 46.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
படிக்க | தமிழ்மொழியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
சித்ரகூட், பிரயாக்ராஜ், அமேதி, ரேபரலி, ராமர் கோயில் அமையவுள்ள அயோத்தி உள்ளிட்ட 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் இன்று மாலை 3 மணி வரை 46.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.