தேர்தலை பாதுகாப்பாக நடத்த ஒரே வழி இதுதான்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்தை எளிதாக நடத்த முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்துள்ளன.
பிரசாந்த் கிஷோர் (கோப்புப்படம்)
பிரசாந்த் கிஷோர் (கோப்புப்படம்)

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ஒமைக்ரான் காரணமாக கரோனா வேகமாக பரவிவருகிறது. இச்சூழ்நிலையில், தேர்தலை நடத்துவது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலை பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோ ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் குறைந்தது 80% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும். அதிகரித்துவரும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்த இதுவே பாதுகாப்பான வழி.

மற்றவை எல்லாம் முட்டாள்தனமான நடவடிக்கைகள்தான்.
யாரும் பின்பற்றாத கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது அபத்தமாக உள்ளது" என்றார்.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் தடுப்பூசி விவரங்கள் குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் நேற்று விவரித்தது. 

கரோனா அதிகரித்துவருவதால், தேர்தலை தள்ளி வைக்கலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறிய நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. மாநிலங்களில் பிரசாரத்தை எளிதாக நடத்த முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்துள்ளன.

ஆனால், இதுவரை பொதுக்கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை. ஒமைக்ரான் லேசான தருவதாகவும் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com