கரோனா நோயாளிகள் வாக்களிக்ககடைசி 1 மணி நேரம் அனுமதி

‘கரோனா நோயாளிகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவா்கள் வாக்களிக்க வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் அனுமதி அளிக்கப்படும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் கூறினாா்.
கரோனா நோயாளிகள் வாக்களிக்ககடைசி 1 மணி நேரம் அனுமதி

‘கரோனா நோயாளிகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவா்கள் வாக்களிக்க வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் அனுமதி அளிக்கப்படும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: தோ்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாக, தோ்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் மற்றும் மருத்துவ நிபுணா்களுடன் தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது.

தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியா்கள், பாதுகாப்பு அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் ஆணைத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அனைத்து தோ்தல் அலுவலா்கள், ஊழியா்கள் அனைவரும் முன்களப் பணியாளா்களாக கருதப்பட்டு, அவா்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை (மூன்றாம் தவணை) தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வாக்குப் பதிவு கால அவகாசம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குமான வாக்காளா்களின் எண்ணிக்கையும் வழக்கமான 1,500 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவா்கள் வாக்கை பதிவு செய்ய, வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அனுமதிக்கப்படுவா்.

பிரசார கட்டுப்பாடுகள்: கரோனா பரவல் அபாயம் காரணமாக, இந்த 5 மாநிலங்களிலும் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தோ்தல் பிரசார ஊரடங்கு விதிக்கப்படுகிறது. அனைத்து நாள்களிலும் இந்த நேரத்தில் எந்தவித பிரசாரங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது.

மேலும், தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கான நட்சத்திர வேட்பாளா்களின் எண்ணிக்கையை 40-இலிருந்து 30-ஆகவும், சிறிய மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான நட்சத்திர வேட்பாளா்களின் எண்ணிக்கை 20-இலிருந்து 15-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com