தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பஞ்சாப் முதல்வரின் சகோதரர் சுயேச்சையாகப் போட்டி: கட்சியில் வாய்ப்பு மறுப்பு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் இளைய சகோதரர் மனோகர் சிங்குக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

News image
பஞ்சாப் முதல்வர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து
Updated On :16 ஜனவரி 2022, 1:30 pm

DIN


பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் இளைய சகோதரர் மனோகர் சிங்குக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் இளைய சகோதரர் மனோகர் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கட்சி மேலிடத்தின் முடிவால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், விரக்தியடைந்த மனோகர் சிங் பஸ்ஸி பதானா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். அந்தத் தொகுதியில் ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் குர்பிரீத் சிங்கை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஊடகங்களிடம் இதுபற்றி அவர் கூறியது:

"இன்று காலை எனது சகோதரரைச் சந்தித்தேன். மக்களின் விருப்பத்தினால், பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அவரிடம் கூறினேன். பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.