உ.பி. தேர்தல்: கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. 
உ.பி. தேர்தல்: கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது. இதில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

மற்றொரு புறம் சமாஜவாதி கட்சியும் கடும் போட்டியில் இறங்கியுள்ளது. தேர்தலில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், அசம்கர் தொகுதி மக்களிடம் அனுமதி பெற்ற பிறகே பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அகிலேஷ் யாதவ் புதன்கிழமை தெரிவித்தார்.

அகிலேஷ் தற்போது அசம்கர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com