ஹைதராபாத்: பிப்.5-ல் பிரமாண்ட ராமானுஜர் சிலையை பிரதமர் திறந்துவைக்கிறார்

ஹைதராபாத் அருகே சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமானுஜர் சிலையை பிப்.5ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
ஹைதராபாத்: பிப்.5-ல் பிரமாண்ட ராமானுஜர் சிலையை பிரதமர் திறந்துவைக்கிறார்

ஹைதராபாத் அருகே சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமானுஜர் சிலையை பிப்.5ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத்தில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் ராமானுஜருக்கு 216 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு வருகிறது. 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறையை மட்டும் அமைத்துள்ளனர். 

45 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் பிரமாண்ட ராமானுஜர் சிலைலைய பிப்.5ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

தொடர்ந்து கருவறை அமைந்துள்ள உள் அறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 13-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத் துறவியான ராமானுஜர் 1017ஆம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com