முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவுக்கு கரோனா

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெ.டி. தேவெ கௌடாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெ.டி. தேவெ கௌடாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தேவெகௌடா அலுவலகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவும் இந்தக் தகவலை உறுதி செய்திருக்கிறார். கரோனா நோய்த் தொற்றிலிருந்து தேவெ கௌடா விரைவில் குணமடைய வேண்டி அவர் வாழ்த்தியுள்ளார்.

ஜூன் 1996 முதல் ஏப்ரல் 1997 வரை இந்தியாவின் 12-வது பிரதமராக தேவெ கௌடா இருந்தார். முன்னதாக, 1994 முதல் 1996 வரை கர்நாடக மாநிலத்தின் 14-வது முதல்வராக இருந்துள்ளார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com