ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு: பிரதமர் அறிவிப்பு

மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 11:10 am

DIN

மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

மும்பை டார்டியோ பகுதியிலுள்ள 20 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தரைதளம் மற்றும் 20 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 18-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை சில மணி நேரங்களில் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். 

இந்நிலையில், மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ. 50,000-ம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.