காஷ்மீர்: 88 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 88 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ஆ
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 88 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளில் 3 ஏகே ரக துப்பாக்கிகள், 6 கைத்துப்பாக்கிகள், 1071 தோட்டாக்கள், 20 கையெறிகுண்டுகள், 2 ஐஈடி வகை வெடிகுண்டுகள் மற்றும் 17.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்துப் பேசிய எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் காஷ்மிர் ராஜா பாபு சிங் ‘மோசமான வானிலையில் பதுங்கு குழிகளில் வாழ்வது, பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம் (பிஏடி) ஆபத்து, தொலைதூர துப்பாக்கி சுடும் வீரர்கள் போன்ற பல சவால்கள் இருந்தபோதிலும் நம் வீரம் மிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் எல்லைக் கட்டுப்பாட்டு கோளில் 24 மணி நேரமும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளனர். அர்ப்பணிப்பு மற்றும் தளராத மனப்பான்மையால் சிறந்த தகவல் தொடர்புடன் எதிராளியை குழப்பமடையச் செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார்.

மேலும், கைப்பற்றப்பட்ட மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களின் மதிப்பு 88 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com