
கேரளத்தில் புதிதாக 49,771 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் ஒரேநாளில் 49,771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,771 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 13 புதிய பேருந்து நிலையங்கள்: அரசாணை வெளியீடு
மேலும் 34,439 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 53,32,410 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று 63 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 52,281 ஆக உயர்ந்துள்ளது. 3,00,556 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...