குடியரசு நாள்:  தூய்மைப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் கௌரவிப்பு

நாட்டின் 73-ஆவது குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். 
குடியரசு நாள்:  தூய்மைப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் கௌரவிப்பு
குடியரசு நாள்:  தூய்மைப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் கௌரவிப்பு

நாட்டின் 73-ஆவது குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். 

அதையடுத்து நாட்டின் ராணுவ வலிமை, கலாசார பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 5,000 முதல் 8,000 பார்வையாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கட்டுமானப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், சிறப்பு விருந்தினர்களாகக் கருதப்பட்டு, இவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்றார். அவா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

வழக்கமாக குடியரசு நாள் விழாக் கொண்டாட்டங்கள் ஜனவரி 25-ஆம் தேதி தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாள் ஆண்டு கொண்டாடப்படுவதால், ஒருநாள் முன்னதாக ஜனவரி 24-ஆம் தேதியில் இருந்தே குடியரசு நாள் கொண்டாட்டங்கள் தொடங்கின.

குடியரசு நாள் விழாவையொட்டி ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. அவை ராணுவத்தின் வலிமை, நாட்டின் பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்றன.

குடியரசு நாள் விழா கொண்டாட்டங்களை நாடுமுழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர. பிரசாா் பாரதி சார்பில் 360 டிகிரியில் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் இரு கேமராக்களும் நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com