கேரளத்தின் பல மாவட்டங்களிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விரிவான விசாரணை நடத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் தனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதிலளிக்காமல் தங்களது அரசுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.