அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்: அமித்ஷா பேச்சு

அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம்தான் என்றும் இந்த காலகட்டத்தில் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் விஷ்வகுருவாக உருவெடுக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்: அமித்ஷா பேச்சு

ஹைதராபாத்: அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம்தான் என்றும் இந்த காலகட்டத்தில் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் விஷ்வகுருவாக உருவெடுக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் பாஜகவின் காலம் தான் என்றும், இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா கூறினார். 

தெலங்கானா போன்ற மாநிலங்களில் குடும்பம், சாதிவெறி அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் பாஜகவின் வெற்றியை மேற்கோள் காட்டி பேசிய அமித்ஷா, இது கட்சியின் "வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கான வளர்ச்சி அரசியலுக்கு" மக்களின் அங்கீகாரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், அரசியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.  

பாஜகவின் அடுத்த சுற்று வளர்ச்சி தென்னிந்தியாவில் இருந்து வரும். மேலும் காங்கிரஸை குறிவைத்து பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்துடன் ஒரு குடும்பக் கட்சியாக சிக்கிக்கொண்டிருப்பதால், அது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும், அதனால் புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும்,  வேறு யாரேனும் கட்சியின் தலைவராக வந்தால் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்ற பயத்தில் ராகுல் காந்தி உள்ளதாகவும், கட்சிக்குள் ஜனநாயகத்திற்காகப் போராடும் காங்கிரஸ் உறுப்பினர்களால் எதிர்கட்சிகள் பிளவுபட்டு, வெறுப்படைந்துள்ளதாகவும், குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

2002 குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீது குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது" என்றும் அமித்ஷா பாராட்டினார். நீதிமன்றமும் மனுதாரர்களை கடுமையாக சாடியது.

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மீது ஆதரமாற்ற தரவுகளைக் கொடுத்து அவதூறு செய்ய சதி செய்ததற்காக எதிர்க்கட்சிகள், ஒரு சில ஊடகங்கள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உச்ச நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது.

அரசியமைப்பு சட்டத்தில் நம்பிக்கை வைத்து குஜராத் கலவர வழக்கின் விசாரணையை பிரதமர் மோடி எதிர்கொண்டதாகவும், ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது அவர் தனது கட்சியினர் மூலம் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டாக கூறினார்.

குடியுரிமை (திருத்த) சட்டம், ராமர் கோவில் கட்டுதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 370வது பிரிவை ரத்து செய்தல் போன்ற பிரச்னைகளை குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் எதிர்த்து வருகின்றன.

மேலும், "குடும்ப அரசியல், சாதிவெறி அரசியல்" ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்தவர், மேலும் அவை "பெரும் பாவங்கள்" என்றும், பல ஆண்டுகளாக நாட்டின் துன்பங்களுக்குப் பின்னால் உள்ள காரணம் என்றும் கூறினார். 

தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறிய ஷா, காவி கட்சியின் அதிகார அணிவகுப்பில் இருந்து இதுவரை விலகிய ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வரும் என்றார் அமித்ஷா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com