தொடர்ந்து உயரும் எரிபொருள்களின் விலை: பிரதமரை விமர்சிக்கும் ராகுல் காந்தி

எரிபொருள்களின் விலை மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எரிபொருள்களின் விலை மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி, நாட்டு மக்கள் பிரதமரினால் ஏற்படுத்தப்பட்ட தடைகளான காஸ் சிலிண்டர்,பெட்ரோல் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வேலைவாய்பின்மை போன்றவற்றால் சோர்வடைந்துள்ளனர். எரிபொருள்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை சுனாமியாக உருவெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவின் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை அவரது 125வது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக திறந்து வைத்துப் பேசினார். அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அல்லூரி சீதாராம ராஜூ ஆங்கிலேயர்களை எதிர்த்து “தைரியமிருந்தால் என்னைத் தடுங்கள்” என முழக்கமிட்டதாகப் பேசினார். மேலும், நாட்டு மக்களும் அவரைப் போலவே தாங்கள் சந்திக்கும் சவால்களை அவர் கூறிய அதே முழக்கத்தை எழுப்பி வீரமாக சந்திப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை விமர்சித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உயர்ந்து வரும் எரிபொருள்கள் விலை குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “ 133 கோடி மக்களும் தாங்கள் சந்திக்கும் சவால்களுக்கு தைரியமிருந்தால் எங்களை தடுங்கள் என வீரமாக கூறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியின் கீழ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை 157 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வேலைவாப்பின்மை சுனாமியாக உருவெடுத்துள்ளது. உண்மையில் மக்கள் இந்த சவால்களையெல்லாம் உருவாக்கியது பிரதமர்தான் எனக் கூறி வருகின்றனர். மேலும், மக்கள் சோர்வடைந்து விட்டனர். இதை நிறுத்துங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com