உத்தரப் பிரதேசம்: திருமண விழாவிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

உத்தரப் பிரதேசத்தில் வேகமாக சென்ற வாகனம் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசம்: திருமண விழாவிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

உத்தரப் பிரதேசத்தில் வேகமாக சென்ற வாகனம் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் சித்தரக்கூட் மாவட்டத்தில் இன்று (ஜூலை 9) காலை அரங்கேறியுள்ளது. 

இது குறித்து சித்தரக்கூட் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர ராய் கூறியிருப்பதாவது: “ தக்காளி ஏற்றி வந்த வாகனம் ரௌலி கல்யான்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. காலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்த சோக நிகழ்வில் வாகனம் 8 பேர் மீது இடித்துச் சென்றது. இந்த சம்பவத்தில் நரேஷ் (35 வயது), அரவிந்த் (21 வயது), ராம் ஸ்வரூப் (25 வயது), சக்கா (32 வயது), சோம்தத் (25 வயது) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பகவான் தாஸ் (45 வயது) மற்றும் ராம் நாராயன் (50 வயது) ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பந்தா மாவட்டத்தின் ஜாரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ரௌலி கல்யான்பூர் கிராமத்திற்கு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ள அவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.” என்றார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி சுப்ராந்த் சுக்லா இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். காயமடைந்த இருவரின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com