ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஜலவர்ஸ் பகுதியில் 140 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பன்ஸ்வாராவில் உள்ள புங்ராவில் 137 மிமீ மழையும், பாகிடோரா, ஷெர்கர், ராய்பூர், சஜ்ஜன்கர் மற்றும் சல்லோபட் ஆகிய இடங்களில் முறையே 98 மிமீ, 93 மிமீ, 91 மிமீ, 80 மிமீ மற்றும் 79 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: உலகை வியப்பில் ஆழ்த்திய தொலைநோக்கி: யார் இந்த ஜேம்ஸ் வெப்?
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில் 79 மி.மீட்டருக்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பன்ஸ்வாரா, துங்கர்பூர், பிரதாப்கர், பார்மர், ஜலோர் மற்றும் பாலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.