தெலங்கானாவில் கனமழை: 19 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு 

தெலங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 
தெலங்கானாவில் கனமழை: 19 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு 

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் இடைவிடாது பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக தலைமை செயலாளர் சோமேஷ் குமார் இன்று அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். மேலும் நிலமை கட்டுக்குள் உள்ளதாகவும், பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மாநிலத்தில் உள்ள 223 முகாம்களில் 19,071 பேர் மாற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 16 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்டனர் மற்றும் இந்திய விமானப்படை 2 நபர்களையும் விமானம் மூலம் மீட்டது. 

முலுகு, பூபாலப்பள்ளி மற்றும் பத்ராத்ரி-கொத்தகுடம் ஆகிய மாவட்டங்களில் கோதாவரி நதி வேகமாகப் பாய்வதால் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார். 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுவர் இடிந்து மற்றும் மின்கசிவால் இதுவரை 10 உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com