சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் சொன்ன ரகசியக் குறிப்பு

சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷாவால் ஒரு ரகசியக் குறிப்பை பகிர்ந்துள்ளார்.
சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் சொன்ன ரகசியக் குறிப்பு
சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் சொன்ன ரகசியக் குறிப்பு
Updated on
1 min read


புது தில்லி: முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, என்னில் சிறந்த பாதி என்று லலித் மோடி டிவிட்டரில் பகிர்ந்திருந்த நிலையில், சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷாவால் ஒரு ரகசியக் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

சுஷ்மிதா சென்னுடன் உலக சுற்றுலா சென்றுவிட்டு லண்டன் திரும்புவதாக, லலித் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் அன்றைய தினம் சமூக வலைத்தளங்களை திக்குமுக்காட வைத்த நிலையில், இது குறித்து சூசகமாக, சுஷ்மிதா சென்னின் பெயரைக் குறிப்பிடாம்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசியக் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

அதாவது, யாருடன் இருக்கும் போது புன்னகைபுரிந்தால் உனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போது புன்னகை செய்!! ஏனென்றால் பிரச்னை அவர்கள் அல்ல, நீதான்!! #அன்பை பரப்புவோம் வெறுப்பை அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு முதல் ரோஹ்மன் ஷாவாலுடன் சுஷ்மிதா சென் நெருங்கிப் பழகி வந்தார். இவர்கள் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில்தான், நிலவில் இருப்பது போல உணர்கிறேன் என்று லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுட்டுரையில் பகிர்ந்து, டிவிட்டரையே சூடாக்கியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com