'என்னில் பாதி' சுஷ்மிதா சென்னுடன் புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டரை சூடாக்கிய லலித் மோடி

'என்னில் சிறந்தபாதி' என்ற குறிப்புடன் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை சுட்டுரையில் பகிர்ந்து சமூக வலைத்தளப் பக்கத்தை சூடாக்கினார் லலித் மோடி.
'என்னில் பாதி' சுஷ்மிதா சென்னுடன் புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டரை சூடாக்கிய லலித் மோடி
'என்னில் பாதி' சுஷ்மிதா சென்னுடன் புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டரை சூடாக்கிய லலித் மோடி


புது தில்லி: 'என்னில் சிறந்தபாதி' என்ற குறிப்புடன் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை சுட்டுரையில் பகிர்ந்து சமூக வலைத்தளப் பக்கத்தை சூடாக்கினார் லலித் மோடி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மூளையாக இருப்பவர் லலித் மோடி. இவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை இரவு, சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, "என்னில் #சிறந்தபாதி" என்றும் "நிலவில் இருப்பது" போல் உணர்வதாகவும் பதிவிட்டு பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்தார்.

இந்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் லலித் மோடி, தன்னில் சிறந்த பாதி என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார். அதற்கு தனது வாழ்க்கைத்துணை, உடன் வாழ்பவர், துணைவி என்று ஆங்கில அகராதிகள் என்னவோ பல பொருள்களை உணர்த்துகின்றன.  ஆனால் இந்தியாவில் வாழ்க்கைத் துணையை மட்டுமே அவ்வாறு அழைக்கும் வழக்கம் உள்ளது.

குடும்பத்துடன் உலக சுற்றுலாவை நிறைவு செய்து விட்டு லண்டன் திரும்புவதாகவும், என்னில் சிறந்த பாதி சுஷ்மிதா சென்.. என்றும் லலித் மோடி கூறியுள்ளார். நேற்று இரவு 9.45 மணிக்கு லலித் மோடி சுட்டுரையில் இட்ட பதிவு குறைந்தபட்சம் மூன்றாயிரம் பேரால் மறுப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களைப் பார்த்த மக்கள், லலித் மோடிக்கு தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டதோடு, தேனிலவு முடிந்த பிறகாவது இந்தியாவுக்குத் திரும்புவீர்களா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த லலித் மோடி, "விளக்கம் அளிப்பதற்காகவே இந்தப் பதிவு, இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை - இரண்டு பேரும் டேட்டிங் சென்றிருந்தோம் அவ்வளவே. ஒரு நாள் அதுவும் கூட நடக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சுஷ்மிதா சுற்றுலாவின் போது எடுத்த புகைப்படத்தை தனது சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.
சுஷ்மிதா சுற்றுலாவின் போது எடுத்த புகைப்படத்தை தனது சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.

பல ஆண்டு காலமாக பாலிவுட்டும் கிரிக்கெட்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே பயணித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு இணை அந்தப் பட்டியலில் சேரலாம் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com