மேற்குவங்கத்தை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கருப்பு - காய்ச்சல்

மேற்குவங்கத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 11 மாவட்டங்களில் சுமார் 65 பேருக்கு கருப்பு - காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 
மேற்குவங்கத்தில் மீண்டும் கருப்பு - காய்ச்சல் (கோப்புப்படம்)
மேற்குவங்கத்தில் மீண்டும் கருப்பு - காய்ச்சல் (கோப்புப்படம்)


கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 11 மாவட்டங்களில் சுமார் 65 பேருக்கு கருப்பு - காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

மாநிலம் முழுவதும் கருப்பு - காய்ச்சல் பரவி வரும்நிலையில், தீவிர கண்காணிப்பில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் குறிப்பாக டார்ஜிலிங், மால்டா, உத்தர் தினஜ்பூர், தெற்கு தினாஜ்பூர் மற்றும் கலிம்போங் ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான கருப்பு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கருப்பு காய்ச்சல் நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.

மாநில அரசுக்கு மிகப்பெரிய  தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் கருப்பு காய்ச்சலை மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள பிகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கணிசமான நேரத்தை செலவிட்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com