நாட்டில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா; 49 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்தனர்.


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (சனிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,044 ஆக இருந்தது. நேற்று முன் தினம் 20,038ஆக இருந்தது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,43,449-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,790 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.47 சதவிகிதமாக உள்ளது. இதுவரை 4.30 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...