குடியரசுத் தலைவர் தேர்தல்: 3 ஆம் சுற்று முடிவில் திரெளபதி முர்மு முன்னிலை

குடியரசுத் தலைவர் தேர்தல் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு முன்னிலை வகித்துள்ளார்.
திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தல் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு முன்னிலை வகித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு சுற்றுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 

மூன்றாவது சுற்றில் கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன.  

ஏற்கெனவே இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் இருந்த நிலையில் மூன்றாம் சுற்று முடிவில், திரௌபதி முர்மு 812 வாக்குகளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ 521 வாக்குகள் பெற்றுள்ளனர்.

அதில் திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 577,777 என்றும், யஷ்வந்த் சின்ஹ பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062 என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

ட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படுகிறது. மூன்று கட்டங்களிலும் திரெளபதி முர்மு முன்னிலை வகித்துவரும் நிலையில் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com