குடியரசுத் தலைவர் தேர்தல்: 2ஆம் சுற்றிலும் திரௌபதி முர்மு முன்னிலை

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் சுற்று முடிவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்: 2ஆம் சுற்றிலும் திரௌபதி முர்மு முன்னிலை
குடியரசுத் தலைவர் தேர்தல்: 2ஆம் சுற்றிலும் திரௌபதி முர்மு முன்னிலை


புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் சுற்று முடிவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில், அகரவரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இரண்டாம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திரௌபதி முர்மு 1349 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ 537 வாக்குகள்  பெற்றுள்ளார்.

திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 4,83,299 என்றும், யஷ்வந்த் சின்ஹ பெற்ற வாக்குகளின் மதிப்பு 1,89,876 என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??

முதல் சுற்று முடிவில், 
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான 748 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில், திரௌபதி முர்மு 540 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹ 208 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 3,78,000 என்றும், யஷ்வந்த் சின்ஹ பெற்ற வாக்குகளின் மதிப்பு 1,45,000 என்றும், 15 எம்பிக்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருந்தார். இதன் மூலம் இரண்டாம் சுற்று முடிவிலும் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

இதையும் படிக்க.. கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் முர்முவின் சொந்த ஊர் எப்படி இருக்கிறது பாருங்கள் 

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படுகிறது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தங்கள் ஊர் மகள் திரௌபதி முர்மு நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையோடு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது அவரது சொந்த ஊரான ரெய்ரங்பூர்.

வாக்கு எண்ணிக்கை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. இந்தத் தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனா். திரெளபதி முா்மு வெற்றி பெறும்பட்சத்தில், நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியை அடையும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அவா் பெறுவாா். அவருக்கே வெற்றி வாய்ப்பும் அதிகம் உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று மாலையிலேயே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தற்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-இல் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-இல் பதவியேற்கிறாா்.

முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. அதன் நிலவரத்தை தோ்தல் அலுவலா் பி.சி.மோடி அறிவித்துள்ளார்.  அதில் 540 வாக்குகளுடன் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார்.

பின்னா், அகரவரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவையும் அவா் அறிவிப்பாா். அதன்பின்னா், அடுத்த 20 மாநிலங்களின் நிலவரம் அறிவிக்கப்பட்டு இறுதியாக தோ்தல் முடிவு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் தோ்தலில் 99 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com